Wednesday, May 19, 2021

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!


பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான். சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. நோய் தீர்க்கும் மருந்தாகவும்  பூக்கள் பயன்படுகின்றன.செல்வரத்தம்  பூவைத் தண்ணீரில் இட்டு சூடாக்கி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமாகுமாம். தூதுவளைப் பூவை வதக்கி துவையலாக உண்டால் சளி ற்றும் மூக்கடைப்பு குணமாகுமாம். பூக்களின் மருத்துவக் குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். பூக்களுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்து வெற்றியும் கண்டுள்ளார்கள்

Tuesday, May 18, 2021

விசித்திரமான உலகில் வாழ்கின்றோமா?



இயற்கை  எங்களைப் பார்த்துச் சிரிக்கிறது. இன்று நீ படும் இன்னல்களுக்குக் காரணம் என்னை நீ நேசிக்காததும் என்னை நீ பாதுகாக்கத் தவறியதும் தான் என்று சொல்லாமல் சொல்கின்றது.

அழகை இரசித்திருக்கின்றீர்களா?


நாம் வாழும் பூமியியின் அழகை இரசித்து இருக்கின்றோமா? இயற்கை அழகைப் பார்த்து வியந்து இருக்கின்றோமா? இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் மன அமைதியுடன் வாழ்கின்றார்கள் 

அவர்களை எப்போதுமே நோய் நொடிகள் அண்டியது இல்லை. இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் தான் இன்சொல் பேசுகிறார்கள். அவர்கள் பேசும் இன் சொல் நோய்க்கு மருந்தாகிறது.

Monday, May 17, 2021

மூன்று வயதுப் பிள்ளை சுயநலவாதி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?


பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்து அதற்கேற்ற முறையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் வயதிலும் வளர்ச்சிப் படிகளிலும் அவர்களுடைய தேவைகள், திறமைகள் ஆர்வங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.

இன்று நாங்கள் மூன்று வயதுப் பிள்ளையை அறிந்துகொள்வோம். புரிந்து கொள்வோம்.

Sunday, May 16, 2021

இளமைக்காலத்தை மீண்டும் நீங்கள் நினைவுபடுத்திப் பார்த்ததுண்டா ?

என் கேமராவுக்கு சிக்கிய படங்கள் உங்களது இளமை காலத்தை நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன்.

உங்கள் இளமைக் காலத்தில்  சகோதர சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றதா?

குரங்குகளும் இரசித்து ருசித்து உண்ணுமா?

 எனது கேமராவில் சிக்கிய அருமையான படங்களை                    உங்களோடு  பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 கொறோனா  ஆரம்பமாவதற்கு முன்பு மட்டக்களப்பு நகருக்கு அருகாமையில் உள்ள ஆரையம்பதிக்குச்  சென்றிருந்தேன்.

Saturday, May 15, 2021

சிறுவர் பாடல் - பட்டம்

     சிறுவர் பாடல் -  3   

பட்டம்

பட்டம்  நல்ல பட்டமாம்

பறந்து செல்லும் பட்டமாம்

 

துள்ளிக் குதிக்கும் பட்டமாம்

தூரச் செல்லும் பட்டமாம் 

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்க...